இஸ்ரேலில் மாயமான பிரித்தானிய பெண்கள் குறித்து வெளியாகியுள்ள சமீபத்திய செய்தி
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பலர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பிரித்தானியர்களும் அடங்குவர்.
காணாமல் போனவர்களில் இரண்டு அழகிய சகோதரிகள்
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் Lianne (48). அவர் 7ஆம் திகதி நடந்த தாக்குதலிலேயே கொல்லப்பட்டுவிட்டார். அவரது கணவரான Eliயைக் காணவில்லை.
Eliயையும் சேர்த்து, காணாமல் போன பிரித்தானியர்கள் மொத்தம் 10 பேர். அவர்களில் Eli, Lianne தம்பதியரின் மகள்களான Noiya (16) மற்றும் Yahel (13) ஆகியோரும் அடங்குவர் என தகவல் வெளியாகியிருந்தது.
BBC
பிரித்தானியாவில் பிறந்தவரான Lianneக்கு 19 வயது இருக்கும்போது, பிரித்தானியாவிலிருந்து ஒரு தன்னார்வலராக இஸ்ரேலுக்குச் சென்றவர். பின்னர் நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட்டார்.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், Noiyaவின் தங்கையான Yahelம் கொல்லப்பட்டுவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
Noiyaவையும், அவரது தந்தையான Eliயையும் இன்னமும் காணவில்லை.
bbc
மேலும், Eliயின் சகோதரரான Yossi, அவரது மனைவி Nira மற்றும் தம்பதியரின் மூன்று மகள்களும் தாக்குதலில் சிக்கியுள்ளார்கள்.
தற்போது, Yossiயும் அவரது மகள்களில் ஒருவரும், பிணைக்கைதிகளாக ஹமாஸ் ஆயுதக்குழுவால் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மற்றவர்கள் நிலைமை தெரியவில்லை.
bbc
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |