சுவிட்சர்லாந்தில் ஹொட்டல் குளியலறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண் வழக்கில் எதிர்பாராத பெரும் திருப்பம்

Investigation Swiss Court
By Balamanuvelan Sep 21, 2021 06:41 AM GMT
Report

பிரித்தானிய இளம்பெண் ஒருவர் சுவிட்சர்லாந்திலுள்ள ஹொட்டல் ஒன்றில் குளியலறையில் இறந்து கிடந்த வழக்கு உலகின் கவனம் ஈர்த்தது.

Anna Florence Reed (22) என்ற அந்த பெண்ணின் மரணம் தலைப்புச் செய்தியாவதற்கு காரணம், அவர், தன் காதலரான Marc Schatzle (29) என்ற ஜேர்மன் நாட்டவருடன் பாலியல் விளையாட்டு ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மூச்சுத்திணறி இறந்துபோனார் என்று வெளியான தகவல்தான்.

Annaவின் மரணத்தைத் தொடர்ந்து, சட்டத்துறை நிபுணரான அமெரிக்க நீதிபதி Eugene Hyman, கழுத்தை நெறிப்பது போன்ற செயல்பாடுகள் கொண்ட இந்த வகை விளையாட்டுகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

இப்படி உலகம் முழுவதையும் தன் பக்கம் இழுத்த Annaவின் வழக்கில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Anna உயிரிழந்த Ticinoவிலுள்ள La Palma au Lac என்ற ஹொட்டலின் லிப்ட் ஒன்றில், Annaவின் கிரெடிட் கார்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் ஹொட்டல் குளியலறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண் வழக்கில் எதிர்பாராத பெரும் திருப்பம் | British Heiress Murdered Boyfriend Money Court

Anna மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அதனால், இதுவரை பாலியல் விளையாட்டில் இறந்ததாக கருதப்படும் Anna, பணத்துக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என இப்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Marc இரவு விடுதிகளிலும் மதுபான விடுதிகளிலும் பவுன்சராக பணி புரிபவர். அவருக்கு 40,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக கடன் உள்ளது. இந்நிலையில், செல்வந்தரான Annaவின் வங்கிக்கணக்கில் 25,000 பவுண்டுகளுக்கும் அதிகமான பணம் இருப்பதை Marc அறிந்துகொண்டுள்ளார்.

Annaவின் கிரெடிட் கார்டு ஹொட்டலில் உள்ள லிப்ட் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தபோது, அதை தான் விளையாட்டுக்காக மறைத்து வைத்ததாக Marc கூறியிருந்தார். ஆனால், அதை அவர் திருடி வேண்டுமென்றே மறைத்து வைத்திருந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் ஹொட்டல் குளியலறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண் வழக்கில் எதிர்பாராத பெரும் திருப்பம் | British Heiress Murdered Boyfriend Money Court

ஆகவே, Marc பணத்துக்காகவே Annaவைக் கொலை செய்துவிட்டு, பிறகு மறைத்து வைத்திருந்த கிரெடிட் கார்டை எடுத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டிருக்கிறார். பிறகு, பாலியல் விளையாட்டில் தவறு ஏற்பட்டதால் Anna இறந்துபோனதாக அவர் பொய் சொல்லியிருக்கிறார் என தாங்கள் நம்புவதாக வழக்கை விசாரிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், Anna இறப்பதற்கு முந்தைய தினம், அவரது அறையிலிருந்து வாக்குவாதம் செய்யும் சத்தமும், கண்ணாடி உடையும் சத்தமும் பயங்கரமாக கேட்டதாகவும், பக்கத்து அறையிலுள்ளவர்கள், போர்ட்டர் ஒருவரை அனுப்பி Annaவையும் Marcஐயும் அமைதியாக இருக்கும்படி கூறச் சொன்னதாகவும் அந்த ஹொட்டலில் பணிபுரியும் ஊழியர்களும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரிச்சில் சிறையிலடைக்கப்பட்டுள்ள Marcஇன் சட்டத்தரணிகள் கவனக்குறைவால் மரணம் நிகழ்ந்ததாக வாதத்தை முன்வைத்துள்ள நிலையில், இப்போது வழக்கே தலைகீழாக மாறிவிட்டதால், இனி Marc நிலைமை சிக்கல்தான் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சுவிட்சர்லாந்தில் ஹொட்டல் குளியலறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண் வழக்கில் எதிர்பாராத பெரும் திருப்பம் | British Heiress Murdered Boyfriend Money Court

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US