பிரான்சில் மாயமான பிரித்தானிய பெண்... காதலியின் உடலை தானே தேடி கண்டுபிடித்த காதலர்
பிரித்தானிய பெண் ஒருவர் பிரான்சில் மலையேற்றத்துக்கு சென்ற நிலையில் திடீரென மாயமானார்.
Esther Dingley (37) மலையேற்றத்துக்கு சென்ற நிலையில், கடந்த நவம்பர் 22 அன்று தன் காதலருக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதைத் தொடர்ந்து அவரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. ஆகவே அவரது காதலரான Daniel Colegate பொலிசாருக்கு தகவலளிக்க, அவர்கள் Estherஐ தேடும் முயற்சியில் இறங்கினார்கள்.
ஆனால், மோசமான வானிலை காரணமாக தேடுதல் முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன் அவரது எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. DNA பரிசோதனையில் அந்த எலும்பு Estherஉடையதுதான் என உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில் Estherஇன் காதலரான Daniel, தொடர்ந்து தனது காதலியின் உடலைத் தேடிவந்துள்ளார். அப்படி தேடும்போது, நேற்று அவர் Estherஇன் உடலைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Estherஇன் உடல் பாகங்களும், அவர் வைத்திருந்த சில பொருட்களும், அவரது எலும்பு கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சற்று தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Estherஇன் உடல் கிடைத்த இடம், சூழல் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அவர் விபத்து ஒன்றில் உயிரிழந்திருக்கலாம் என தாங்கள் கருதுவதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும் தொடர்ந்து Estherஇன் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கிலாந்திலிருந்து 2014ஆம் ஆண்டு வெளியேறிய Estherம் Danielம் 20 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வருபவர்கள். வேன் ஒன்றில் ஐரோப்பா முழுவதையும் அவர்கள் சுற்றி வந்த நிலையில், Daniel வீட்டை கவனித்துக்கொள்ள, Esther தங்கள் வேனில் ஸ்பெயினுக்கு சென்றபோது மலையேற்றத்துக்கு செல்ல, அதன் பிறகு அவர் சடலமாகத்தான் கண்டெடுக்கப்பட்டார்.