மன்னராக சார்லஸ் பதவியேற்றதில் இருந்து அதிகரித்த நிராகரிப்பவர்களின் எண்ணிக்கை
பிரித்தானியாவில் பேரரசு என்ற வார்த்தையின் காரணமாக பிரித்தானிய கௌரவத்தை நிராகரிப்பவர்களின் அதிகரித்துள்ளது.
கௌரவ விருதுகள்
பொது வாழ்க்கையில் சாதனை செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் MBE, OBE உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், தற்போது இந்த கௌரவ விருதுகளை நிராகரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தி மெய்லின் பகுப்பாய்வு கூறுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சார்லஸ் மன்னராக பதவியேற்றதில் இருந்து 120க்கும் மேற்பட்டோர் இந்த விருதுகளை நிராகரித்துள்ளனர். இதற்கு காரணம் 'பேரரசு' என்ற வார்த்தைதான் என கூறப்படுகிறது.
பேரரசு
இந்த ஆண்டு 55 பேர், மன்னரின் பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு கௌரவப் பட்டியல்களில் இருந்து ஒரு வாய்ப்பை மறுத்துவிட்டனர்.
இது 2,314யில் 2.3 சதவீதம் ஆகும். 2023 மற்றும் 2022 ஆண்டுகளில் முறையே 51 மற்றும் 43 பேர் நிராகரித்தனர்.
பிரித்தானிய ஏகாதிபத்திய வரலாற்றைப் பற்றிய அமைதியின்மைக்கு இடையில், அரச அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 'பேரரசு' என்ற வார்த்தை கௌரவ விருதுகளில் இருந்து கைவிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |