ஒரேயொரு பிரித்தானியர்... 425 நாட்கள்: ஹமாஸிடம் சிக்கியுள்ள மகள் குறித்து கலங்கும் தாயார்
காஸாவில் ஹமாஸ் படைகளிடம் சிக்கி, தற்போதும் உயிருடன் இருக்கும் சிலரில் பிரித்தானியரும் ஒருவர் என்று நம்பப்படுகிறது.
தற்போதும் உயிருடன் இருக்கும்
பிரித்தானியரான 28 வயது எமிலி தமாரி என்பவர் ஹமாஸ் படைகளிடம் தற்போதும் உயிருடன் இருக்கும் சுமார் 50 கைதிகளில் ஒருவர் என நம்பப்படுகிறது. எமிலியின் தாயார் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில்,
தமது மகள் பட்டினியால் மரணமடையக் கூடும் என கண்கலங்கியுள்ளார். தமது மகளுக்கு உயிர் காக்கும் உதவிகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சர்ரே பகுதியை சேர்ந்த மழலையர் பள்ளி ஆசிரியரான மாண்டி, சம்பவத்தன்று ஹமாஸ் படைகளிடம் தாம் சிக்காமல் தப்பியதன் காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தாம் தங்கியிருந்த பாதுகாப்பு அறை திறக்க முடியாமல் சிக்கிக்கொள்ள, ஹமாஸ் படைகள் அந்த அறைக்குள் நுழைய முடியாமல் போனது என்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஹமாஸ் படைகளிடம் எமிலி சிக்கிக்கொண்டது தமக்கு பின்னர் தெரிய வந்தது என்றார்.
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடில் சுமார் 1200 பேர்கள் கொல்லப்பட்டதுடன் 251 பேர்கள் கடத்தப்பட்டனர். எமிலி துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் எமிலி தொடர்பில் தகவல் தெரிவித்துள்ளதாகவும் மாண்டி தெரிவித்துள்ளார்.
கண்ணியத்துடனும் மரியாதையுடனும்
தற்போது ஹமாஸ் படைகளிடம் சிக்கியிருக்கும் கடைசி பிரித்தானியப் பணயக்கைதியும் அவள்தான் என்றார். 8 மாதங்கள் முன்னர் வரையில், எமிலி உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் தங்களுக்கு கிடைத்து வந்ததாகவும், ஆனால் தற்போதும் அவர் உயிருடன் இருப்பார் என நம்புவதாகவும் மாண்டி தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் படைகளிடம் சிக்கியிருக்கும் ஒவ்வொரு நாளும் எமிலிக்கு மரண தண்டனை போன்றது என்பது தங்களுக்கு தெரியும் என்றும் மாண்டி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர்கள் அவளை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவள் தாகமாக இருந்தால் அவளுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்,
அவள் பசியாக இருந்தால் அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்… அவளை உயிருடன் வைத்திருங்கள் என மாண்டி உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |