இன்னும் சில மணி நேரந்தான்... கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு புதிய அறிவுறுத்தல்
பிரித்தானியாவில் புதிய கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட இருக்கும் நிலையில், பழைய கட்டணத்தில் கடவுச்சீட்டு பெற இன்னும் சில மணி நேரங்களே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 11ம் திகதி முதல்
கடந்த 2023 பிப்ரவரி மாதம் புதிய கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் 9 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. தற்போது இணைய மூடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 82.50 பவுண்டுகள் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் ஏப்ரல் 11ம் திகதி முதல் கடவுச்சீட்டு கட்டணமானது 88.50 என அதிகரிக்க உள்ளது.
அதாவது 14 மாதங்களுக்கு பின்னர், மீண்டும் ஒரு 7 சதவீத கட்டணம் அதிகரிக்க உள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இந்த கட்டண உயர்வால் திரட்டப்படும் நிதியானது கடவுச்சீட்டு சேவையை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்றே பிரித்தானிய உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கட்டண உயர்வில் இருந்து தப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு என்றும், இனி சில மணி நேரங்களே எஞ்சியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். வெளிநாட்டில் தங்கியிருக்கும் பிரித்தானியர்கள் அல்லது அவசரமாக கடவுச்சிட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
100 பவுண்டுகள் கட்டணம்
இருப்பினும் 1929, செப்டம்பர் 2ம் திகதிக்கு முன்னர் பிறந்த பிரித்தானியர்களுக்கு இலவசமாகவே கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. 2023 பிப்ரவரி மாதத்தில் கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் முன்னர், இணையமூடாக விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுக்கு 75.50 பவுண்டுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
தற்போது ஏப்ரல் 11ம் திகதி முதல் இணையமூடாக விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுகளுக்கு 88.50 பவுண்டுகள் வசூலிக்கப்பட உள்ளது. சிறார்களுக்கு இணையமூடாக விண்ணப்பிக்க 57.50 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
அஞ்சலகமூடாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 100 பவுண்டுகள் கட்டணமாகவும், சிறார்களுக்கு அஞ்சலகமூடாக விண்ணப்பிக்க 69 பவுண்டுகள் கட்டணமும் வசூலிக்க உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |