உலகிலேயே முதல் முறையாக '3D Printed' கண் பொருத்தப்பட்ட பிரித்தானியர்!
3டி அச்சிடப்பட்ட கண் பொருத்தப்பட்ட உலகின் முதல் நோயாளி என்ற பெருமையை பிரித்தானியர் ஒருவர் பெற்றுள்ளார்.
கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னியைச் சேர்ந்த பொறியாளரான 47 வயதான ஸ்டீவ் வெர்ஸ்க்கு (Steve Verze), சென்ற வியாழன் அன்று இடது கண்ணாக இந்த 3D Printed கண் பொருத்தப்பட்டது.
மூர்ஃபீல்ட்ஸ் (Moorfields) கண் மருத்துவமனை , வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், ஒரு நோயாளிக்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட முற்றிலும் டிஜிட்டல்மயமான முதல் செயற்கை கண் இது என கூறப்பட்டுள்ளது.
மற்ற மாற்று வழிகளைக் காட்டிலும் இந்த டிஜிட்டல் கண் மிகவும் யதார்த்தமானதாக தோற்றமளிக்கிறது. மேலும் இந்த கண் தெளிவாகவும் கருவிழியின் உண்மையான ஆழத்தையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை கூறியது.
பிற செயற்கைக் கண்கள் ஒரு கருவிழியை கையால் வரையப்பட்ட வட்டில் வரையப்பட்டிருக்கும் (iris hand-painted onto a disc), பின்னர் அது கண் சாக்கெட்டில் உட்பொதிக்கப்படுகிறது. இருப்பினும், அவற்றின் வடிவமைப்பு கண்ணின் "முழு ஆழத்திற்கு" ஒளி செல்வதைத் தடுக்கிறது என்று மருத்துவமனை கூறியது.
Credit: ITV News
ஆனால் இந்த புதிய 3D Printed கண், மிகவும் யதார்த்தமாகத் தோன்றுவதுடன், செயல்முறை குறைவான ஆக்கிரமிப்பை உடையது (less invasive) என்று கருதப்படுகிறது.
பாரம்பரிய செயற்கைக் கருவிகளைப் பொருத்துவதற்கு கண் சாக்கெட்டில் ஒரு அச்சு (mold) எடுக்கப்பட வேண்டும், ஆனால், 3டி செயற்கைக் கண் வளர்ச்சியில் சாக்கெட் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்பட்டு விரிவான படத்தை உருவாக்குகிறது.
இந்த நிலையில், Steve Verze-க்கு இரண்டு கண்களும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதிசெய்ய, செயல்பாட்டில் இருக்கும் அவரது வலது கண்ணும் ஸ்கேன் செய்யப்பட்டது.Credit: ITV News

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022