கடைசி நேரத்தில் பிரித்தானியர் வாங்கிய லொட்டரிச்சீட்டு: திருமண நாளில் கிடைத்த இன்ப அதிர்ச்சி
வழக்கமாக லொட்டரிச்சீட்டு வாங்கும் பிரித்தானியர் ஒருவர் கடைசி நேரத்தில் வாங்கிய லொட்டரிச்சீட்டு ஒன்று, அவரது வாழ்வையே மாற்றிவிட்டது.
லொட்டரிச்சீட்டு வாங்க மறந்த பிரித்தானியர்
ஸ்கொட்லாந்திலுள்ள Fife என்னுமிடத்தில் வாழ்ந்துவருபவர்கள், ஜார்ஜ், சாண்ட்ரா தம்பதியர் (George Muir, Sandra McCormack). ஜார்ஜ் வழக்கமாக லொட்டரிச்சீட்டு வாங்குபவர்.
ஆனால், இம்மாதம் 3ஆம் திகதி லொட்டரிச்சீட்டு வாங்க மறந்துவிட்டிருக்கிறார். கடைசி நேரத்தில் திடீரென லொட்டரிச்சீட்டு வாங்க மறந்துவிட்டது ஞாபகம் வரவே, உடனடியாக சென்று லொட்டரிச்சிட்டு வாங்கிவந்துள்ளார் ஜார்ஜ்.
திருமண நாளில் கிடைத்த இன்ப அதிர்ச்சி
தங்கள் 28ஆவது திருமண நாளைக் கொண்டாடுவதற்கான வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது அவர்களுக்குத் தெரியாது. ஆம், கடைசி நேரத்தில் ஜார்ஜ் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 145,757.50 பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது.
முன்னதாகவே பணி ஓய்வு பெற தம்பதியர் முடிவு செய்தாலும், உடனடியாக வேலையை விடும் எண்ணம் எதுவும் தங்களுக்கில்லை என்கிறார்கள் ஜார்ஜ், சாண்ட்ரா தம்பதியர். என்றாலும், கார் ஒன்றை வாங்கவும், இன்பச் சுற்றுலா ஒன்றிற்கும் திட்டமிட்டுவருகிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |