உக்ரைன் அகதிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர்: மீண்டும் இணைந்த ஜோடி
பத்து நாட்கள் பழகிய உக்ரைன் காதலிக்காக, பத்து ஆண்டுகள் கூடவாழ்ந்த மனைவியையும் பிள்ளைகளையும் கைவிட்டார் பிரித்தானியர் ஒருவர்.
கண்டதும் காதல்
ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த சோபியா (Sofiia Karkadym, 22) என்ற அழகான இளம்பெண்ணுக்கு, Bradfordஇல் வாழும் டோனி (Tony Garnett, 29) மற்றும் அவரது துணைவியான லோர்னா (Lorna), தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள்.
ஆனால், சோபியாவுக்கும் டோனிக்கும் பத்தே நாட்களில் காதல் பற்றிக்கொள்ள, லோர்னா தட்டிக்கேட்க, மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் டோனி.
Credit: Louis Wood
ஆனால், டோனி சோபியா காதல் நான்கு மாதங்கள் கூட நீடிக்கவில்லை. புதுக்காதலி சோபியாவையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டார் டோனி. மனம் நொந்துபோன சோபியா உக்ரைனுக்கே போய்விட்டார்.
மீண்டும் இணைந்துள்ள ஜோடி
இந்நிலையில், பிரிவு காதலர்களில் காதலை அதிகரித்துள்ளது. சமீபத்தில் உக்ரைனுக்குச் சென்ற டோனி, சோபியாவின் குடும்பத்தைச் சந்தித்துள்ளார்.
சுமார் இரண்டு மாதங்கள் பிரிவுக்குப் பிறகு இருவரும் சந்திக்க, மீண்டும் காதல் பற்றிக்கொண்டுள்ளது ஜோடிக்கு. டோனி தன்னைத் தேடி வந்ததால் சோபியா உருகிப்போக, தனிமையில் வாடிய டோனியும் சோபியாவைக் கண்டதும் மகிழ்ச்சியடைய, தற்போது மீண்டும் சோபியாவை பிரித்தானியாவுக்கே அழைத்துக்கொண்டுவந்துவிட்டார் டோனி.
இனி உருப்படியாக வேலைக்குப் போகப்போகிறேன் என்று டோனி கூற, ஏற்கனவே குடித்ததால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் போதும், இனி குடிக்கமாட்டேன் என முடிவு செய்து குடியை விட்டுவிட்ட சோபியா மீண்டும் படிக்கப்போவதாகக் கூற, மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளது ஜோடி.
இதற்கிடையில், மீண்டும் டோனியும் சோபியாவும் இணைந்தது தன்னை ஆச்சரியப்படவைத்துள்ளதாக தெரிவித்துள்ள டோனியின் முன்னாள் மனைவியான லோர்னா, அவர்கள் ஒருவருக்கொருவர் ஏற்றவர்கள்தான் என்று கூறி அவர்கள் இணைந்ததை வரவேற்றுள்ளார்.
Credit: NB PRESS LTD