பிரித்தானியாவை விட 25 மடங்கா! அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த இளைஞரின் வீடியோ..எழுந்த விமர்சனங்கள்
அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பிரித்தானியர் ஒருவர் ரயில் டிக்கெட்டை ஒப்பிட்டு கூறிய விடயம் பேசுபொருளாகியுள்ளது.
ரயில் டிக்கெட்
பிரித்தானியாவில் இருந்து கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர் ஜோஷ் மெக்காலியன்.
சிட்னி நகரில் வசிக்கும் அவர் சுற்றுலாப் பகுதிகளை நோக்கி பயணித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த வாரம், நியூகேஸில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயில் டிக்கெட்டுகளின் விலை பற்றி அவருக்கு தெரியவில்லை.
சிட்னியில் இருந்து நியூகேஸில் செல்ல அவர் ரயில் டிக்கெட் வாங்கியுள்ளார். இந்த பயணம் சுமார் இரண்டரை மணி நேரம் எடுக்கும். இதற்கு டிக்கெட் விலை நெரிசலான நேரங்களில் 10.66 டொலர்கள் மற்றும் நெரிசலற்ற நேரங்களில் 7.46 டொலர்கள் ஆகும்.
இதேபோன்று தூரத்தை பிரித்தானியாவில் ஒருவர் ரயிலில் பயணிக்க எவ்வளவு செலவாகும் என்று மெக்காலியன் ஒப்பிட்டு பார்த்தபோது ஆச்சரியமடைந்துள்ளார்.
ஏனெனில், இங்கிலாந்தில் உள்ள நியூகேஸிலில் இருந்து டெர்பிக்கு செல்லும் பயணத்தை மெக்காலியன் விளக்கினார்.
25 மடங்கு குறைவு
அங்கு மலிவான டிக்கெட் 190 டொலர்கள் ஆகுமாம். இதன்மூலம் அவுஸ்திரேலியாவில் இதே காலப்பயணத்திற்கான டிக்கெட் விலை பிரித்தானியாவை விட 25 மடங்கு குறைவு என்கிறார் அவர்.
இதுதொடர்பான வீடியோவை அவர் பகிர, சமூக ஊடக பயனர்கள் பலர் இங்கிலாந்தின் தனியார்மயமாக்கப்பட்ட ரயில் வலையமைப்பை குற்றம் சாட்டினர்.
அதே சமயம் அவுஸ்திரேலியாவில் எல்லா பயணங்களும் அவ்வளவு மலிவானவை அல்ல என்று மெக்காலியனை எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |