உக்ரைன் அழகிக்காக மனைவியைக் கைவிட்ட பிரித்தானியர்.. மீண்டும் ஒரு உக்ரைன் பெண்ணுக்கு வீட்டில் அனுமதி
உக்ரைன் அழகிக்காக பத்து ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியைக் கைவிட்ட பிரித்தானியர், மீண்டும் ஒரு உக்ரைன் பெண்ணுக்கு வீட்டில் இடமளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் Bradfordஐச் சேர்ந்த டோனி (Tony Garnett, 29) என்ற பிரித்தானியர், சோபியா (Sofiia Karkadym, 22) என்ற உக்ரைன் நாட்டு இளம்பெண்ணுக்காக தன் மனைவியான லோர்னா (Lorna, 28)வையும் தன் இரண்டு பிள்ளைகளையும் கைவிட்டு விட்டார்.
தற்போது வாடகை வீடு ஒன்றில் வாழ்ந்து வரும் டோனி, மீண்டும் ஒரு உக்ரைன் பெண்ணுக்கு தங்கள் வீட்டில் இடமளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், அந்தப் பெண்ணின் பெயரும் சோபியாதான்!
Credit: Louis Wood
ஆனால் இம்முறை வந்திருக்கும் சோபியா (Sofiia Rastorhuieva, 19), தனியாக வரவில்லை. அவர் தன் காதலரான இல்லியா (Illia Tronevych, 18) என்பவருடன் வந்திருக்கிறார்.
அந்த சோபியா, இல்லியா ஜோடி, டோனி வாழும் அதே நகரில் வாழும் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், அந்த வீட்டுக்காரர் அவர்களை வீட்டை விட்டுத் துரத்திவிட்டாராம்.
Credit: NB PRESS LTD
அதை சமூக ஊடகம் ஒன்றின் மூலம் தெரிந்துகொண்ட டோனி, அந்த சோபியா, இல்லியா ஜோடிக்கு தன் வீட்டில் இடமளித்துள்ளாராம்.
அடடா, டோனி ஏற்கனவே ஒரு பெண்ணுக்காக மனைவியைக் கைவிட்டார், இப்போது இன்னொரு பெண்ணுக்கு தன் வீட்டில் இடம் கொடுத்திருக்கிறாராமே, இனி அந்தப் பெண்ணையும் காதலிக்கத் துவங்கிவிடுவாரோ என்றுதான் மக்கள் நினைப்பார்கள் என்கிறார் டோனி. டோனியின் காதலியான சோபியாவோ, மேலும் இரண்டு உக்ரைனியர்களுடன் ஒரே வீட்டில் வாழ்வதால், தான் தன் சொந்த நாட்டில் வாழ்வதுபோலவே உணர்வதாக தெரிவித்துள்ளார்.
Credit: LNP