மனைவியை கொடூரமாக கொன்றுவிட்டு ஐரோப்பாவை சுற்றிய பிரித்தானியர்! 25 ஆண்டுகள் சிறை
இத்தாலிய கனவு இல்லத்தில் தனது மனைவியை கொலை செய்த பிரித்தானியருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மனைவி கொலை
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில், கிழக்கு இத்தாலியில் உள்ள Verratti என்ற நகரில் 66 பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டது பொலிஸாருக்கு தெரிய வந்தது.
தொலைபேசி அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மிச்சேல் ஃபேயர்ஸ் என்ற பெண்ணின் சடலத்தை மீட்டபோது, அவர் ஒன்பது முறை கத்தியால் குத்திப்பட்டிருந்தார்.
முதற்கட்ட விசாரணையில், ஃபேயர்ஸின் கணவர் மைக்கேல் வைட்பிரெட்தான் (75) அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஆனால், அவர் அங்கிருந்து தப்பித்து சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் வழியாக வாகனம் மூலம் இங்கிலாந்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் Loughborough அருகே கைது செய்யப்பட்ட மைக்கேல் வைட்பிரெட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அதீத பொறாமை மற்றும் தாக்குதல் நடத்திய மனைவியை கொன்றதாக கூறிய அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |