தன் மனைவியைப் போலவே இருந்த இளம்பெண்ணைக் கொன்ற பிரித்தானியர்: அவர் கூறிய காரணம்
அழகிய இளம்பெண் ஒருவர் தன் மனைவியைப்போலவே இருந்ததால் ஆத்திரமடைந்த பிரித்தானியர் ஒருவர், அந்தப் பெண்ணை கொடூரமாக கொலை செய்ததுடன் அவரது இரண்டு வயது மகளையும் கொலைசெய்தார்.
இணையத்தில் சந்தித்த அழகிய இளம்பெண்
ஸ்கொட்லாந்தில் வாழும் ஆண்ட்ரூ (Andrew Innes, 52), தான் இணையத்தில் சந்தித்த பென்னிலின் (Bennylyn Burke, 25) என்ற இளம்பெண்ணையும் அவரது மகளான ஜெலிகா (Jellica, 2)என்ற குழந்தையையும் கொலை செய்து தன் சமையலறையில் புதைத்தார்.
Credit: PA
விசாரணையின்போது, பென்னிலின் பார்ப்பதற்கு தன் மனைவியைப்போலவே இருந்ததாகவும், அவரது உடல் அச்சு அசலாக தனது முன்னாள் காதலி ஒருவருடைய உடலைப் போலவே இருந்ததாகவும் கூறிய ஆண்ட்ரூ, அவரைப் பார்க்கும்போது, தன்னை விட்டுப் பிரிந்த தன் முன்னாள் மனைவி செய்த மோசமான செயல்களும், தனது முன்னாள் காதலி ஒருவர் தன்னை பயங்கரமான நிலையில் விட்டுவிட்டு போனதும் நினைவுக்கு வந்ததாகவும், அதனால் அளவுக்கு மீறிய ஆத்திரம் ஏற்படவே, தான் பென்னிலினைக் கொலை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
தயாரித்துள்ள 40 பக்க ஆவணம்
ஆண்ட்ரூவுக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதித்துறையின் தவறு காரணமாக தான் தண்டிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார் ஆண்ட்ரூ.
தான் ஸ்டீராய்டு மருத்துகள் எடுத்துக்கொள்வதாக கூறியிருந்த ஆண்ட்ரூ, அந்த மருந்துகளின் பக்க விளைவுகள் தனக்கு மன நல பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அதனால்தான் தான் கொலை செய்ததாகவும் கூறியிருந்தார்.
Credit: Police Scotland
ஆகவே, அந்த கொலைகளுக்கு தான் முழுமையாக பொறுப்பல்ல என்றும், நீதித்துறையின் தவறு காரணமாக தான் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கருதும் ஆண்ட்ரூ, தான் குற்றவாளி என முடிவுசெய்யப்பட்டுள்ளதற்கு தனது சட்டத்தரணிகள்தான் காரணம் என கருதுகிறார்.
ஆகவே, அவர்களுக்கு பதிலாக, தானே தன் தரப்பு நியாயத்தை விளக்கி, 40 பக்க ஆவணம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறார்.
நீதிபதிகள், நாளை இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க இருக்கிறார்கள்.
Credit: PA