மகனின் காதலியை துஷ்பிரயோகம் செய்த பிரித்தானிய தந்தை- சுற்றுலா சென்ற இடத்தில் சம்பவம்
வெளிநாட்டுக்கு மகனுடன் சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய தந்தை, தனது மகனின் காதலியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய தந்தையும் மகனும் ஸ்பெயின் நாட்டிலுள்ள Majorca தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ரிசார்ட் நகரம் என அழைக்கப்படும் Magaluf-வில் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர்.
அந்த விடுதியில், மகனின் அறையில் அவரது பெண் தோழி ஒருவரம் வந்து தங்கியுள்ளார். 20 வயதான அப்பெண்ணும் பிரித்தானியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Picture: Solarpix.com
கடந்த செவ்வாய்கிழமை, இரவு அப்பெண் அதே அறையில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, மகன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொள்ள வெளியே சென்றிருந்ததால், அப்பெண் தனியாக இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட தந்தை, நள்ளிரவில் மகனின் அறைக்கு சென்று அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
ஒருவழியாக அவரிடமிருந்து தப்பி ஓட்டலை விட்டு வெளியேறிய அப்பெண், மகலூஃப் பகுதியில் உள்ள பண்டா பல்லேனா பார்ட்டி ஸ்ட்ரிப் அருகே உள்ள சிவில் காவலர் அலுவலகத்தில் எச்சரிக்கையை எழுப்பினார்.
உடனடியாக காவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அந்த நபர் தனது உடமைகளையும் கடவுசீட்டையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்ச சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
Picture: Solarpix.com
தனது விடுமுறைக்கு கொண்டாட்டங்களை அத்துடன் முடித்துக்கொண்ட அந்த நபர் பிரித்தானியாவுக்கு திரும்ப அவசர அவசரமாக பால்மா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் விரைந்து வந்த ஸ்பெயின் பொலிஸார் தப்பியோட முயன்ற அவரை போர்டிங் கேட் அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பின்னர் அவர் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் நடந்ததை வாக்குமூலமாக கொடுத்த பின்னர், விசாரணை நீதிபதிகள் அவரை காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
45 வயது மதிக்கத்தக்க நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஸ்பெயினில் சாதாரணமாக, விசாரணைக்கு சற்று முன் மட்டுமே முறையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது போல, அவர் மீது இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை.