செத்து விடுவேன் என நினைத்தேன்..! சிங்கப்பூர் பூங்காவில் தனக்கு நேர்ந்த பயங்கரத்தை விவரித்த பிரித்தானியர்
சிங்கப்பூரில் நீர்நாய்களால் கடித்து குதறி தாக்கப்பட்ட பிரித்தானியர், அவருக்கு நேர்ந்த பயங்கரத்தை விவரித்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபயிற்சி சென்ற 60 வயதுடைய Graham Spencer-என்ற பிரித்தானியரை சுமார் 20 நீர்நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீர்நாய்கள் கடித்ததில் Graham Spencer-ன் உடம்பில் பிட்டம், கால்கள் மற்றும் விரல்கள் என 26 காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 30ம் திகதி Graham Spencer வழக்கம் போல காலை 6 மணிக்கு நடைபயிற்சி சென்றுள்ளார்.
அப்போது, திடீரென 20 நீர்நாய்கள் குழு Graham Spencer மீது பாய்ந்து, அவரை கீழே விழச்செய்து கடித்து குதறியுள்ளன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட Graham Spencer விவரித்ததாவது, 10..12 நொடிகளில் இச்சம்பவம் நடந்தது.
என்னால் நகர முடியவில்லை, செத்து விடுவேன் என நினைத்தேன். நீர்நாய்கள் என் முகத்தையோ கழுத்தையோ கடித்திருந்தால் நான் இறந்திருப்பேன்.
நீர்நாய்கள் குழந்தைகளை இவ்வாறு தாக்கியிருந்தால் கண்டிப்பாக அவர்களால் பிழைத்திருக்க முடியாது என கூறினார்.
Spencer-ஐ நீர்நாய்களை கடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடன் வந்த நண்பர், உடனே கத்தியபடி அவரை இழுத்துச் சென்று காப்பாற்றியுள்ளார்.