பிரித்தானியரை கொலை செய்து, தற்கொலை நாடகமாடிய காதலி!
இந்தோனேசியாவில் பிரித்தானிய காதலனை கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக காதலி நாடகமாடிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோதேசிய தீவான பாலியில், 48 வயதாகும் பிரித்தானியரான Matt Harper, இந்தோனேசிய காதலியான Emmy Pakpahan உடன் வசித்து வந்துள்ளார்.
Harper-க்கு முன்னாள் மனைவியுடன் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். விவாகரத்தான நிலையில், அவர் 2020 பிப்ரவரியில் பாலி தீவுக்கு தனது கனவு வாழ்க்கையை வாழ்வதற்காக குடியேறியுள்ளனர். அவரது முன்னாள் மனைவிக்கும் பிறகு வேரோருவருக்கும் திருமணம் நடந்து இன்னொரு பெண் குழந்தையும் உள்ளது.
அதேபோல், Emmy-யும் முன்னதாக அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். அந்த அத்திருமணம் மூலம் Emmy அமெரிக்க குடியுரிமையையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், Harper தனது முன்னாள் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீடியோ கால் செய்து சமீபத்தில் பேசியுள்ளார். இது பிடிக்காத Emmy, அவருடன் சண்டைபோட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினையில், Emmy கோபத்தின் உச்சிக்கு சென்ற நிலையில், Harper-ஐ கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர், அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, அவரே வீட்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி, அதற்கேற்றாற்போல் ஆதாரமாக ஒரு வீடீயோவையும் எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆனால், பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து, Emmy-ஐ தீவிரமாக விசாரித்துள்ளார். அதனையடுத்து உண்மைகளை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
