மூவாயிரம் கோடி லொட்டரியில் வென்ற பிரித்தானியர்: என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்
பிரித்தானியர் ஒருவருக்கு சுமார் 108 மில்லியன் பவுண்டுகள் லொட்டரியில் பரிசு விழுந்தது. அந்த நேரத்தில், பிரித்தானியாவிலேயே நான்காவது பெரிய தொகையை லொட்டரியில் வென்றவர் அவர்தான்.
என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்
இங்கிலாந்திலுள்ள சர்ரேயைச் சேர்ந்த நீல் ட்ராட்டருக்கு (Neil Trotter), 2014ஆம் ஆண்டு லொட்டரியில் 107.9 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.
இலங்கை மதிப்பில் அது 39,92,72,32,800.00 ரூபாய் ஆகும்.
ஆனால், பணக்காரராக வாழ்வது போரடிப்பதாகச் சொல்கிறார் நீல்.
லொட்டரியில் பரிசு வென்றதும், தனக்கு சொந்தமாக ஒரு ஏரி அமைந்துள்ள ஒரு இடத்தில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றைக் கட்டினார், ஆடம்பரக் கார்களும் வாங்கினார் நீல்.
ஆனாலும், இவ்வளவு நாட்கள் வேலைக்குச் சென்றுவிட்டு, இப்போது வேலைக்குச் செல்லாமல், சும்மா உட்கார்ந்துகொண்டு தொலைக்காட்சியை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பது போரடிக்கிறது என்கிறார் நீல்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |