ரஷ்யாவிற்கு எதிராக போரில் களமிறங்கிய பிரித்தானியர்கள்!
உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத்தில் முன் அனுபவம் இல்லாத இரண்டு பிரித்தானிய இளைஞர்கள் முன்வந்துள்ளனர்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போரை நடத்திவரும் சூழலில், இந்த போரை நிறுத்தக்கோரி உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பொதுமக்கள் குரல் குடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் உக்ரைனுக்கு உதவ முன்வரும் அனைத்து வெளிநாட்டினர்களுக்கும் உக்ரைன் வருவதற்கான விசா முறையில் தளர்வு வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த உக்ரைன் ஆதரவாளர்களும் உக்ரைனுக்கு விரைந்து வருகின்றனர்.
அந்தவகையில், லிவர்பூல் பகுதியை மாட் ஹார்டன்(25), ஸ்காட்லாந்தை சேர்ந்த ஸ்டீவன், மற்றும் பெயர் சொல்ல விரும்பாத அல்ஜீரிய-அவுஸ்திரிலேயாவை சேர்ந்த (24)வயது நபர் என மூவரும் இணையதளம் வாயிலாக சந்தித்து, உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இவர்களில் யாருக்கும் ராணுவத்தில் பணியாற்றிய முன் அனுபவமோ அல்லது போரில் கலந்து கொண்ட அனுபவமோ இல்லாத நிலையிலும், உக்ரைனில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக, அந்த நாட்டு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மனிதாபிமானத்தின் அடிப்படையில் இந்த போரில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களின் முதல் இலக்காக போலந்தின் எல்லையில் இருந்து 70கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உக்ரைனின் லிவிவ் நகருக்கு சென்றடைந்து, அங்கிருந்து உக்ரைனியர்களுக்கு உதவி தேவைப்படும் அனைத்து இடத்திற்கும் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டு எல்லையை கடப்பதற்கு முன்பு இதுகுறித்து பேசிய லிவர்பூல் பகுதியை மாட் ஹார்டன்(25), இதற்கு முன்பு எந்தவொரு ராணுவ அனுபவமும் இல்லை ஆனால் எனக்கு துப்பாக்கிகளை கையாள்வதற்கு தெரிவும், மேலும் நான் இந்த போரில் கலந்து கொள்ளவது பற்றி எனது பெற்றோருக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.
பிரித்தானியர்கள் போரில் கலந்து கொள்வதற்கு அந்த நாட்டின் பாதுகாப்பு துறை செயலாளர் Ben Wallace எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இவர்கள் உக்ரைனுக்கு சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் Liz Truss, ரஷ்யா படைகளுக்கு எதிராக பிரித்தானியர் போரில் இறங்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் எனவும் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.