மனைவியை பிரிந்து வேறு பெண்ணுடன் மற்றொரு நாட்டுக்கு இடம்பெயர்ந்த பிரித்தானிய கோடீஸ்வரர்! எச்சரிக்கையை மீறியதால் நேர்ந்த விபரீதம்
பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வரர் Barbados நாட்டுக்கு குடிபெயர்ந்த நிலையில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் Mark Smith (61). இவரின் நிகர சொத்து மதிப்பு $9 மில்லியன் ஆகும்.
பிரித்தானியாவின் South Yorkshireல் வசித்து வந்த அவர் தனது மனைவியை பிரிந்தார்.
இதன் பின்னர் Barbados நாட்டுக்கு சமீபத்தில் குடிபெயர்ந்துள்ளார், அங்கு வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அங்குள்ள கடலுக்கு குளிப்பதற்காக அவர் சென்றிருக்கிறார்.
குறிப்பிட்ட இடத்தின் கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம், அது ஆபத்தான இடம் என அங்கிருந்த பலரும் எச்சரித்துள்ளனர்.
அதையும் மீறி Mark Smith சென்ற நிலையில் வேகமாக வந்த அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த Mark Smith மிகவும் நல்ல மனிதர், உதவும் கொண்ட அவர் பலரின் வாழ்க்கையை மாற்ற உதவியிருக்கிறார் என நண்பர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
