இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கச் சென்ற பிரித்தானிய அமைச்சர்: ஓட்டம் பிடிக்கும் காட்சி
இஸ்ரேலுக்கு பிரித்தானியாவின் ஆதரவைத் தெரிவிப்பதற்காக சென்ற பிரித்தானிய அமைச்சர் ஒருவர் சைரன் ஒலி கேட்டு ஓட்டம் பிடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கச் சென்ற பிரித்தானிய அமைச்சர்
ஹமாஸ் ஆயுதக்குழுவின் திடீர் தாக்குதலுக்காளான இஸ்ரேலுக்கு பிரித்தானியாவின் ஆதரவைத் தெரிவிப்பதற்காக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றிருந்தார், பிரித்தானிய வெளியுறவு அமைச்சரான ஜேம்ஸ் க்ளெவர்லி (James Cleverly).
We stand with ??
— James Cleverly?? (@JamesCleverly) October 11, 2023
I’m here in Israel today to show that the UK’s support for the Israeli people is unwavering.
חזק חזק ונתחזק pic.twitter.com/vQgLwMaALZ
ஜேம்ஸ், பாதிக்கப்பட்டவர்கள் சிலரை சந்தித்து ஆறுதல் கூறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இப்படி அமைச்சர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும்போதே திடீரென சைரன் ஒலித்துள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழு ஏவும் ஏவுகணைகள் வருகின்றன என மக்களை எச்சரிப்பதற்காக ஒலிக்கும் சைரன் அது.
Watch: while UK FM @JamesCleverly visits Ofakim in southern Israel, a siren goes off warning of incoming Hamas rocket fire.
— Israel ישראל ?? (@Israel) October 11, 2023
This is the reality Israelis live with every day. pic.twitter.com/QF4C4tReqL
உடனடியாக அமைச்சருடன் நின்றவர்கள் எச்சரிக்க, அமைச்சரும் மற்றவர்களும் பாதுகாப்பான இடம் நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
அந்த காட்சியை எக்ஸில் வெளியிட்டுள்ளவர், இஸ்ரேல் நாட்டு மக்களுடைய உண்மையான தினசரி வாழ்க்கை இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |