சிவப்பு பட்டியலில் பிரான்ஸ்... பிரித்தானிய அமைச்சர்கள் ஆலோசனை
பிரான்ஸ் நாட்டை சிவப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து பிரித்தானிய அமைச்சர்கள் ஆலோசித்துவருகிறார்கள்.
பீட்டா கொரோனா வைரஸ் பரவல் குறித்த கவலை காரணமாக, பயணம் தொடர்பிலான சிவப்பு பட்டியலில் பிரான்சை சேர்ப்பது குறித்து அவர்கள் ஆலோசித்துவருவதாக தி டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சர்வதேச பயணம் குறித்த மீளாய்வின் ஒரு பகுதியாக இந்த விடயம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்களும் சூழலை கண்காணிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா மிக அதிக கட்டுப்பாடுகள் விதித்துள்ள நாடுகளை தனது சிவப்புப் பட்டியலில் வைத்துள்ளது. அப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சென்றுவருவோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்ததும் தங்களை அரசு நியமித்துள்ள ஹொட்டல்களில் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற விதி அமுலில் உள்ளது. தற்போது பிரான்ஸ் பிரித்தானியாவின் மித அபாய நாடுகள் என குறிப்பிடும் ஆம்பர் பட்டியலில் உள்ளது.
பீட்டா வைரஸ் பரவல் காரணமாக பிரான்ஸை ஆம்பர் பட்டியலில் இருந்து சிவப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்துத்தான் இப்போது பிரித்தானிய அமைச்சர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
பீட்டா கொரோனா வைரஸ் என்பது முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் ஆகும்.