மகன் கண் முன்னே கணவனைக் கொன்ற பிரித்தானிய பெண்ணுக்கு இந்தியாவில் தூக்குத் தண்டனை: அதிர்ச்சிப் பின்னணி
தன் மகன் கண் முன்னே தன் கணவரை கொடூரமாக கொலை செய்த பிரித்தானிய குடிமகளான பெண் ஒருவருக்கு இந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துக்கே தூக்க மருந்து கொடுத்த பெண்
பிரித்தானியாவின் Derbyயைச் சேர்ந்த Ramandeep Kaur Mann (38), 2016ஆம் ஆண்டு, விடுமுறைக்காக இந்தியாவின் டெல்லியிலுள்ள, தன் கணவர் Sukhjit Singh வீட்டுக்கு வந்த நிலையில், ஒரு நாள் அனைவருடைய உணவிலும் தூக்க மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறார்.
Credit: Caters News Agency
அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு கதவைத் திறந்து Gurpreet Singh என்னும் நபரை வீட்டுக்குள் வரவழைத்திருக்கிறார்.
குர்பிரீத், தூங்கிக்கொண்டிருந்த சுக்ஜித் சிங் தலையில் சுத்தியலால் அடித்திருக்கிறார். பின்னர் அவரிடமிருந்த கத்தி ஒன்றை வாங்கிய ரமன்தீப் கௌர், தன் கணவர் இன்னமும் உயிரோடிருக்கும் நிலையில், அவரது கழுத்தைக் கத்தியால் அறுத்து அவரைக் கொன்றிருக்கிறார்.
நடந்ததைக் கண்ணால் கண்ட சாட்சி
ஆனால், தம்பதியரின் இளைய மகன், ஒன்பது வயது சிறுவன், நடந்தததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறான். அவன் தன் தாய் கொடுத்த தூக்க மருந்து கலந்த உணவை சாப்பிடாததால், சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறான்.
Credit: Caters News Agency
அப்போது, தன் தந்தையின் நெஞ்சின் மீது உட்கார்ந்திருந்த தன் தாய், தலையணையை அவர் முகத்தில் வைத்து அழுத்திக்கொண்டிருப்பதை அவன் பார்த்திருக்கிறான்.
அவன் அளித்த சாட்சியத்தின்பேரில், ரமன்தீப் கௌர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவிய குர்பிரீத் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் என்ன?
ரமன்தீப் கௌரின் கணவரான சுக்ஜீத் சிங்கும், குர்பிரீத் சிங்கும் சிறு வயது நண்பர்கள். தன் நண்பரைக் காண அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்த குர்பிரீத்துக்கும், நண்பரின் மனைவியான ரமன்தீப் கௌருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த ரமன்தீப் கௌர், விடுமுறைக்காக இந்தியா வந்த நேரத்தில், காதலர் உதவியுடன் கணவரைக் கொன்றுவிட்டார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், தன் மகன் கண் முன்னே கணவரைக் கொலை செய்த ரமன்தீப் கௌருக்கு தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |