லண்டன் சுற்றுலா தலங்களில் முதலிடம் பிடித்த பிரிட்டிஷ் அருங்காட்சியகம்! டாப் 20 இடங்களின் பட்டியல்
லண்டனின் கலாச்சார பெருமைகளான பிரித்தானிய அருங்காட்சியகம் இங்கிலாந்தின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
லண்டன் சுற்றுலா தளங்கள்
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, புகழ்பெற்ற பிரித்தானிய அருங்காட்சியகம் (British Museum) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இங்கிலாந்தின் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 6,479,952 பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 11% அதிகரிப்பாகும்.
இதையடுத்து லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum) 11% பார்வையாளர் அதிகரிப்புடன் 6,301,972 நபர்களை ஈர்த்து தேசிய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
முன்னணி பார்வையாளர் இடங்களின் சங்கம் (Alva) வெளியிட்ட தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் 3.4% பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
வின்ட்சர் கிரேட் பார்க் (Windsor Great Park) வெளிப்புற சுற்றுலா தலங்களில் முதலிடம் பிடித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் 20 இங்கிலாந்து சுற்றுலா தலங்கள்
பிரித்தானிய அருங்காட்சியகம் (British Museum) - 6,479,952
இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum) - 6,301,972
வின்ட்சர் கிரேட் பார்க் (Windsor Great Park) - 5,670,430
டேட் மாடர்ன் (Tate Modern) - 4,603,205
சவுத் பேங்க் மையம் (Southbank Centre) - 3,734,075
வி & ஏ சவுத் கென்சிங்டன் (V&A South Kensington) - 3,525,700
தேசிய கலைக்கூடம் (National Gallery) - 3,203,451
சோமர்செட் ஹவுஸ் (Somerset House) - 3,074,736
லண்டன் கோபுரம் (Tower of London) - 2,902,385
அறிவியல் அருங்காட்சியகம் (Science Museum) - 2,827,242
ஸ்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம் (National Museum of Scotland) - 2,314,974
கியூ கார்டன்ஸ் (Kew Gardens) - 2,273,976
ராயல் அருங்காட்சியகங்கள் கிரீன்விச் (Royal Museums Greenwich) - 2,255,753
ஸ்காட்லாந்து தேசிய கலைக்கூடங்கள்: தேசிய (National Galleries Scotland: National) - 1,999,196
எடின்பர்க் கோட்டை (Edinburgh Castle) - 1,981,152
ராயல் ஆல்பர்ட் ஹால் (Royal Albert Hall) - 1,753,371
வெஸ்ட்மின்ஸ்டர் அபே (Westminster Abbey) - 1,717,296
தேசிய உருவப்பட கலைக்கூடம் (National Portrait Gallery) - 1,578,065
தி பார்பிகன் மையம் (The Barbican Centre) - 1,541,194
செயின்ட் பால்ஸ் கதீட்ரல் (St Paul's Cathedral) - 1,493,184
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |