இந்தியாவில் பிரித்தானியர் ஒருவர் கைது: அவரது அறையை சோதனையிட்டபோது காத்திருந்த அதிர்ச்சி...
இந்தியாவின் கோவா மாநிலத்தில் பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து பலவகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் பிரித்தானியர் ஒருவர் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட பொலிசார், அவர் பல வகை போதைப்பொருட்களை வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இந்தியாவின் கோவா மாநிலத்திலுள்ள Arambol என்ற கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தார் Stephen Slotwiner (76) என்ற பிரித்தானியர்.
அவரிடம் போதைப்பொருட்கள் இருப்பதாக இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அவர் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டுள்ளனர். அப்போது அந்த வீட்டில் 512 கிராம் கஞ்சா, 40 போதை மாத்திரைகள், 80 கிராம் MDMA என்னும் போதை மருந்து மற்றும் LSD என்னும் போதை மருந்து ஆகியவை கிடைத்துள்ளன.
ஆகவே, Stephen கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Credit: Twitter/@InGoa24x7
Credit: Getty