ரஷ்யாவை விட்டு வெளியேறுங்கள்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
உக்ரைனில் சண்டை தீவிரமடைந்து வருவதால், பிரித்தானிய குடிமக்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் இருக்கவேண்டிய அவசியமில்லாத எந்தவொரு பிரித்தானிய குடிமக்களும் கிடைக்கக்கூடிய ஏதேனும் ஒரு வழியில் உடனடியாக வெளியேறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அறிவித்துள்ளது.
இணையதளத்தில் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ள பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், வெள்ளிக்கிழமை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய சட்டத்தைப் பற்றி பிரித்தானியர்களை எச்சரித்தது.
அந்த புதிய சட்டத்தின்படி "ரஷ்ய ஆயுதப்படைகள் மற்றும் எந்தவொரு இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் கட்டுப்பாடுகள்" விதிக்கபட்டுள்ளது.
பிரித்தானியா தனது வான்வெளியில் இருந்து ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில். துருக்கி மற்றும் மத்திய கிழக்கு வழியாக சில விமானங்கள் பிரித்தானியாவுக்கு வருகின்றன என்று வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இராணுவச் சட்டத்தை விதித்து எல்லையை மூடிவிடுவார் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் ஏற்கனவே தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறியுள்ளனர் . எ
திர்ப்பு மற்றும் கருத்து வேறுபாடுகளை மேலும் ஒடுக்கும் முயற்சியில் அவர் அவசர சட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
ரஷ்ய அரசியலமைப்பின் கீழ், நாடு தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது இராணுவச் சட்டம் விதிக்கப்படலாம். இது நாட்டின் எல்லைகளை மூடுவது, அனைத்து வெளிநாட்டினரைப் பணியமர்த்துவது மற்றும் உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அசாதாரண அதிகாரங்களை அதிபர் புடினுக்கு வழங்கும்.
ஊடக தணிக்கையை மேலும் இறுக்கும் அதிகாரமும் கிரெம்ளினுக்கு வழங்கப்படும், இராணுவத் தளபதிகள் எதை அச்சிடலாம் மற்றும் ஒளிபரப்பக்கூடாது என்பதைக் கட்டுப்படுத்தலாம். அதிகாரிகள் இணையத்தையும், அனைத்து சமூக ஊடக பயன்பாடுகளையும் முழுவதுமாக முடக்கலாம்.
மார்ச் 4-ஆம் திகதி (வெள்ளியன்று) ரஷ்யா தனது 146 மில்லியன் குடிமக்களுக்கு ஃபேஸ்புக் அணுகலை முடக்கியது.
2,000-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் மரணத்தை ஏற்படுத்திய உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சுமார் 7,000 ரஷ்ய எதிர்ப்பாளர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் .