சந்தேகத்துக்குரிய படகு ஒன்றை சுற்றி வளைத்த பிரித்தானிய கடற்படை: படகில் எவ்வளவு போதைப்பொருள் இருந்தது தெரியுமா?
சந்தேகத்துக்குரிய வகையில் பயணித்த படகு ஒன்று பிரித்தானிய கடற்படை சுற்றி வளைத்தது.
அதில், 870 கிலோ போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் சந்தேகத்துக்குரிய வகையில் படகு ஒன்று செல்வதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பிரித்தானிய கடற்படை, ஹெலிகொப்டர் ஒன்றை அந்த இடத்துக்கு அனுப்பியுள்ளது.
படகை ட்ராக் செய்த ஹெலிகொப்டர் அனுப்பிய தகவலின்பேரில் கடற்படையினர் அந்த படகை சுற்றி வளைத்துள்ளனர்.
MINISTRY OF DEFENCE
அந்த படகை சோதனையிட்டபோது, அதில் 870 கிலோ போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் மதிப்பு, 15.5 மில்லியன் பவுண்டுகளாகும்.
இப்படி பெருமளவில் போதைப்பொருள் சிக்குவது இந்த ஆண்டில் இது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
MINISTRY OF DEFENCE