போய் வருகிறேன் என நண்பர்களிடம் விடைபெற்ற பிரித்தானிய இளைஞர்: பெற்றோரை நடுங்க வைத்த காட்சி
சமூக ஊடகம் ஒன்றில், போய் வருகிறேன் என நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்று சென்ற பாடசாலை மாணவன் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
15 வயதேயான கியான் சவுத்வே என்ற பாடசாலை மாணவன், கடந்த ஆண்டு முதல் தேசிய ஊரடங்கின் போதே தற்கொலை செய்து கொண்டான்.
கியான் வெளியிட்ட அந்த சமூக ஊடக பதிவை கவனித்த அவரது சகோதரி, உடனடியாக பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து பயந்து போன கியானின் பெற்றோர், உடனடியாக சென்று பார்த்ததில், கியான் தூக்கிட்ட நிலையில் கண்டுள்ளனர்.
தொடர்ந்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற பெற்றோர், சிகிச்சை பலனின்றி 4 நாட்களுக்கு பின்னர் கியான் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அப்போது அமுலில் இருந்த தேசிய ஊரடங்கால் அவர் தனது நண்பர்களையும் பள்ளியையும் சந்திக்க முடியாமல் தவித்துள்ளார், மேலும் தனது தேர்வுகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதைப் பற்றியும் கியான் கவலைப்பட்டுள்ளார்.
கட்டுப்பாடுகள் கொண்ட தேசிய ஊரடங்கு என்பது தற்போதை இளைஞர்களுக்கு உளவியல் ரீதியான தாக்கத்தை அளித்தது என்பதே உண்மை என குறிப்பிட்டுள்ள விசாரணை அதிகாரிகள்,
அவ்வாறான உளவியல் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் போனதாலையே, கியான் தற்கொலைக்கு முயன்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
