பிரான்ஸ் வலதுசாரிக் கட்சிக்கு பிரித்தானிய கட்சி ஆதரவு: இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் என்ன ஆவது?
பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் திரண்டு பேரணி நடத்தினர். வன்முறை வெடித்ததால், பொலிசார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டது.
பிரான்சிலேயே அக்கட்சிக்கு எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், பிரித்தானியாவில் தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களில் ஒருவரான, லேபர் கட்சி வாக்காளர், பிரான்சில் வெற்றிபெற்ற கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் வெற்றி பெற்றுள்ள கட்சி
பிரான்சில் நடைபெற்ற முதல் சுற்று நாடாளுமன்றத் தேர்தலில், வலதுசாரிக் கட்சியான National Rally பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுள்ளது.
National Rally கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்பு கொள்கைகள் கொண்ட கட்சியாகும்.
அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் பல பிரிவினருக்கும் ஆபத்து என கருதும் மற்றொரு எதிர்க்கட்சி ஆதரவு மக்கள், National Rally கட்சி வெற்றி பெற்றதை எதிர்த்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டார்கள், பொலிசாருடன் கைகலப்பு, தீவைப்பு, கண்ணாடி ஜன்னல்கள் உடைப்பு என தலைநகரமே அல்லோலகல்லோலப்பட்டது.
பிரான்ஸ் வலதுசாரிக் கட்சிக்கு பிரித்தானிய கட்சி ஆதரவு
அப்படி பிரான்ஸ் நாட்டவர்களே National Rally கட்சி வெற்றி பெற்றதை எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அடுத்து பிரித்தானிய பிரதமாராவர் என எதிர்பார்க்கப்படும் லேபர் கட்சித் தலைவரான Sir Keir Starmer, National Rally கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
National Rally கட்சி பிரான்சில் வெற்றி பெற்றால், அக்கட்சியுடன் இணைந்து செயல்படத் தயார் என்று கூறியுள்ளார் அவர்.
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் விடயத்தில் இரு நாடுகளுக்கிடையில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், மேலும் வலுப்பெறும், மேம்படும் என அவர் கூறியுள்ளதால், அவரது கட்சி பிரித்தானியாவில் ஆட்சியைக் கைப்பற்றினால், புலம்பெயர்ந்தோர் நிலை என்னவாகும் என ஓரளவு கணிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |