பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு இந்த முக்கிய விடயத்தைச் செய்ய அனுமதி கிடையாது: ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு இரத்த தானம் செய்ய அனுமதி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இரத்த தானம் தொடர்பில் இருந்த பழமையான பல விதிகள் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையிலும், பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு இரத்த தானம் செய்ய அனுமதி கிடையாது என்ற விதி மட்டும் இதுவரையில் மாறவில்லை!
பிரான்சின் இரத்த தான அமைப்பான Établissement français du sang (EFS)க்கு எப்போதுமே இரத்தம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், நீங்கள் ஒரு பிரித்தானியராக இருந்தால், இரத்த தானம் செய்ய நீங்கள் வரவேற்கப்பட மாட்டீர்கள்...
யாரெல்லாம் இரத்த தானம் செய்ய முடியாது என்று கூறும் பிரான்சின் பட்டியலில், 1980க்கும் 1996க்கும் இடையில், தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கு மேல் பிரித்தானியாவில் தங்கியிருந்தவர்களுக்கு, பிரான்சில் இரத்த தானம் செய்ய அனுமதி இல்லை என்று கூட கூறப்பட்டுள்ளது.
அப்படி பார்த்தால், பெரும்பாலான பிரித்தானியர்கள், பிரித்தானியர்கள் இல்லை என்றாலும் அந்த காலகட்டத்தில் பிரித்தானியாவில் வாழ்ந்தவர்கள், பிரித்தானியாவில் படித்தவர்கள் மற்றும் வேலை பார்த்தவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது.
அதற்காக பிரான்ஸ் முன்வைக்கும் காரணம், ஒரு வேடிக்கையான காரணமாகும்...
பிரித்தானியாவில், 1980, 90களில் mad cow disease என்னும் நோய் கால்நடைகளில் காணப்பட்டது. அதனால், பிரித்தானியாவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதிக்கு 10 ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது!
அந்த காலகட்டத்தில், அந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக, கிட்டத்தட்ட 4 மில்லியன் பசுக்கள் பிரித்தானியாவில் கொல்லப்பட்டன. ஏனென்றால், பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சியை சாப்பிட்ட 177 பேர் உயிரிழந்தும் இருந்தார்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் மாட்டிறைச்சி இறக்குமதி தடையை விலக்கிக்கொண்ட பின்னரும், பிரான்ஸ் நீண்ட காலம் அதற்கு தடை விதித்திருந்தது. இந்த இரத்த தானம் விடயத்திலும் அதே போக்கைத்தான் இப்போதும் கடைப்பிடிக்கிறது பிரான்ஸ்...