ரூ.5 கோடி லொட்டரி பரிசு! பிரித்தானியாவில் பீட்சா டெலிவரி சாரதிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
பிரித்தானியாவில் பீட்சா டெலிவரி பணியாளருக்கு சுமார் ரூ.5 கோடி லொட்டரி அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
பீட்சா டெலிவரி பணியாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்
பிரித்தானியாவை சேர்ந்த பீட்சா டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர், வாழ்க்கையை மாற்றும் லொட்டரி பரிசை வென்றுள்ளார்.
பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்ட்ஷயரின்(Staffordshire), டாம்வொர்த்(Tamworth) பகுதியைச் சேர்ந்த 28 வயதான பீட்சா டெலிவரி சாரதி Marius Preda "பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட் (BOTB)" என்ற லொட்டரி குலுக்கலில் அதிர்ஷ்டவசமாக ₹5.3 கோடி (சுமார் 500,000 பவுண்டுகள்) பரிசை வென்றுள்ளார்.
Credit: Jam Press/ BOTB
இது அவரது ஆண்டு சம்பளத்தை விட 200 மடங்கு அதிகம் ஆகும், இது நிச்சயமாக அவரது வாழ்க்கையை முழுவதுமாக மாற்றிவிடும்.
பாராட்டிய BOTB அதிகாரிகள்
BOTB அதிகாரிகள் Preda அவர்களின் உழைப்பாற்றலையும், விடாமுயற்சியையும் கொண்டாடினார்கள், குறிப்பாக லொட்டரியில் வென்ற பிறகும் அவர் வேலை செய்ய முடிவு செய்ததை பாராட்டினார்கள்.
Preda தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஒரு புதிய வீட்டைக் கட்டமைக்க இந்த பரிசு பணத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி தொடர்புகள் தெரிவிக்கின்றன.
Credit: Jam Press/ BOTB
BOTB தொகுப்பாளர் கிறிஸ்டியன் வில்லியம்ஸ், Preda அவர்களுக்கு இதயம் கணிந்த மகிழ்ச்சியுடனும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் "ஒரு டெலிவரி ஓட்டுநர் பெறக்கூடிய மிகச் சிறந்த டிப் இதுவாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
British Pizza Driver, ₹5 Crore Lottery Win, Tamworth, Life-Changing Money, BOTB