பழைய விமானம் மூலம் பிரித்தானிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! 12 மாதங்களில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
இங்கிலாந்தில் ஒருவர் பழைய விமானத்தை வாங்கி புதிய பார்ட்டி ஹால் போல் வடிவமைத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இங்கிலாந்தின் Cotswolds விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி Suzannah Harvey என்பவர் பழைய விமானம் ஒன்றை பார்டி ஹாலாக மாற்றியுள்ளார். இவர் வெறும் £1 பவுண்ட் விலையாக கொடுத்து இந்த பழைய விமானத்தை வாங்கியுள்ளார்.
ஆனால் அவர் இதை சீரமைக்க லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. விமானத்தின் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பிற்கு கிட்டத்தட்ட 12 மாதங்கள் ஆகியுள்ளன.
இந்த வேலைபாடுகளுக்கு 50 ஆயிரம் பவுண்ட்ஸ்கள் வரை செலவாகியுள்ளது. இந்த விமானத்தில் முழுநேர மதுக்கூடம், டான்ஸ் ஹால் என பல விதமான வசதிகளை கொண்டுள்ளது.
இந்த விமான பார்டி ஹாலை ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுத்தால் ஆயிரம் £1,000 பவுண்ட்கள் செலவாகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை செலவாகும்.
வெறும் 1 பவுண்ட் கொடுத்து வாங்கப்பட்ட விமானம் மூலம் தற்போது Suzannah Harvey ஒரே நாளில் பல ஆயிரம் பவுண்ட்ஸ்களை சம்பாதித்து வருகிறார். முன்னதாக இந்த விமானம் பிரிட்டிஷ் கடற்படையில் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.