ரேடாரிலிருந்து மாயமான பிரித்தானியா விமானம் விபத்துக்குள்ளானது!
பிரித்தானியாவின் ராயல் விமானப்படைக்கு சொந்தமான Hawk T1 ஜெட் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்தின் கார்ன்வாலில் Hawk T1 விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் விமானிகள் இருவரும் வெளியேறிவிட்டதாகவும், இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஜெட் Culdrose-ஐ தளமாகக் கொண்ட 736 கடற்படைப் படைக்கு சொந்தமானது என்று இராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
விமான கண்காணிப்பு வலைத்தளங்களின்படி, ரேடாரில் இருந்து மறைவதற்கு முன்பு Hawk T1 விமானம் அவசரநிலையை அறிவித்ததாக கூறப்படுகிறது.
இன்ஜின் செயலிழந்ததால் விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அவசர சேவைகள் தற்போது Helston-ன் செயின்ட் மார்டின்ஸ் பகுதியில் விரைந்துள்ளதாக Devon & Cornwall பொலிசார் கூறினர்.
