அச்சங்களுக்கு மத்தியில் தைரியமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பிரித்தானியா பிரதமர்! எந்த நிறுவனத்துடையது? வெளியான முக்கிய தகவல்
மிக விரைவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவுள்ளதாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
பிரித்தானியா பிரதமர் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளவுள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இரத்த உறைதல் பக்க விளைவு ஏற்படுவதாக வெளியான தகவலை அடுத்து பல ஐரோப்பிய நாடுகள் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.
இந்நிலையில், பல ஐரோப்பிய நாடுகள் அந்த தடுப்பூசி போடுவதை இடைநிறுத்திய பின்னர் தடுப்பூசி மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க பிரதமர் என்ன செய்யப்போகிறார் என கன்சர்வேடிவ் எம்.பி Steve Brine கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த போரிஸ் ஜான்சன், மிக விரைவில் தான் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா போட்டுக்கொள்வேன் என அறிவித்துள்ளார்.
போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.