லண்டன் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய காவல்துறை: அமைச்சர் அளித்த உறுதி
லண்டனில் Charing Cross காவல்துறையினர், பெண்களை தாக்குதல், ஓரினசேர்கையை குறித்து அவதூறு பரப்புதல் போன்ற தவறான தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், இதற்கு தற்போது பிரித்தானியா காவல்துறை பகிரங்க மன்னிப்புக்கேட்டுள்ளது.
சில ஆண்டுகளாக லண்டன் காவல்துறையினர் மீதான நம்பிக்கை சரிந்து வரும் நிலையில், சமீபத்தில் Sarah Everard என்ற பெண் காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரி ஒருவரால் துஷ்ப்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, Charing Cross என்ற காவல்நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அங்கு குற்றவாளிகளை கொடுமைப்படுத்துதல், பெண்கள் மீது துஷ்ப்பிரயோகம், ஆண் ஆதிக்க மனோபாவம் போன்ற கலாசாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விசாரணைக்குழு, அந்த காவல்துறை நிலையத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் குறுஞ்செய்தி உரையாடல்களையும் வெளியிட்டுள்ளது.
அதில் இனவெறி, பாலியல் துஷ்ப்பிரயோகம், பெண்கள் மீது தரக்குறைவான கருத்துக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு அதிகாரி, தன்னுடன் பணிபுரியும் சக பெண் காவல்துறை அதிகாரிக்கு பாலியல் குறுஞ்செய்திகள் அனுப்பி, கொடுமைப்படுத்தியுயுள்ளதும் அம்பலமானது.
இதனை அடுத்து, Charing Cross காவல்துறையினரின் இதுபோன்ற சம்பங்களுக்கு லண்டன் மக்கள் அனைவரிடமும் ஒட்டுமொத்த லண்டன் காவல்துறையினர் சார்பாக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரித்தானியா உள்விவகாரத்துறை அமைச்சர் Priti Patel பேசுகையில், லண்டன் காவல்துறையினரிடம் இதுபோன்ற கலாசாரம் இருப்பதாகவும், அது விரைவில் சரிசெய்யப்பட்டு காவல்துறையின் தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.