பிரான்ஸ் கடற்கரைகளில் பிரித்தானிய பொலிசார் ரோந்து: கோரிக்கையை நிராகரித்தது பிரான்ஸ்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, பிரித்தானிய பொலிசாரே பிரான்ஸ் கடல் பகுதியில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல் முன்வைத்துள்ளார்.
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் பல்வேறு திட்டங்கள் தீட்டி வருகிறார்.
புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு பெரும் தொகை கொடுத்தும், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
ஆகவே, பிரித்தானிய பொலிசாரே பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து செல்லும் ஒரு திட்டத்தை பிரீத்தி பிரான்சிடம் முன்வைத்துள்ளார்.
ஆனால், பிரித்தானிய பொலிசார் பிரான்ஸ் பகுதியில் ரோந்து செல்வது பிரான்சின் இறையாண்மையை மீறும் செயலாகிவிடும் என்று கூறி, அந்த திட்டத்தை பிரான்ஸ் நிராகரித்துவிட்டதாக பிரீத்தி தெரிவித்துள்ளார்.
ஆனாலும், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் பொலிசார் இணைந்து ஆங்கிலக் கால்வாயில் ரோந்து செல்லும் ஒரு திட்டம் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.