பிரித்தானிய பிரதமர் தேர்தல்: வெற்றி பெறும் வாய்ப்பு இவருக்குத்தான் அதிகமாம்...
பிரித்தானியாவுக்கான அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது போட்டியில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்கும், லிஸ் ட்ரஸ்ஸும் உள்ளார்கள்.
இந்நிலையில், பிரதமருக்கான போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு, லிஸ் ட்ரஸ்ஸுக்கே அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் யார் என செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமரைத் தேர்வு செய்ய இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே அடிக்கடி வாக்கெடுப்புகள் நடந்துகொண்டே இருக்கும். அவ்வகையில், சென்ற வாரம் நடந்த வாக்கெடுப்பில் லிஸ் ட்ரஸ்ஸுக்கு அதிக ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் லிஸ் ட்ரஸ் முன்னணி வகிப்பது உறுதியாகியுள்ளது.
அத்துடன், பல்வேறு தனியார் கருத்துக்கணிப்புகளும் ட்ரஸ் ரிஷியை முந்துவதாகவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
image- REUTERS