பிரித்தானிய பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக்குக்கு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் ஆதரவு
பிரித்தானிய பிரதமர் தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனக்குக்கு முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் ஆதரவு தெரித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கான தகுதி ரிஷிக்கு உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.
பிரித்தானிய பிரதமர் தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனக்குக்கு, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Michael Gove திடீரென தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
முன்பு பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்த Kemi Badenochகுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்த Michael Gove, தற்போது ரிஷிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ரிஷியை எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் ட்ரஸ் உண்மை நிலவரங்களிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டதுபோல் உள்ளது என்று கூறியுள்ள Michael Gove, ரிஷி கொண்டு வந்த வரிகள் அவர் விரும்பிக் கொண்டுவந்த வரிகள் அல்ல என்றும், அவை கோவிட் சூழல் காரணமாக விதிக்கப்படவேண்டிய நிலை உருவானதால் விதிக்கப்பட்ட வரிகள் என்றும் கூறியுள்ளார்.
GETTY IMAGES
ஒருவர் பிரதமர் பதவியில் அமர்வதற்கு என்னென்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று கூறியுள்ள Michael Gove, அந்த தகுதிகள் ரிஷியிடம் உள்ளன என்று கூறியுள்ளார்.
நெருங்கிய நண்பர் சாஜித் ஜாவித் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரிஷியைக் கைவிட்ட நிலையில், பிரித்தானிய அரசியலில் முக்கியமான ஒருவரான Michael Gove ரிஷிக்கு ஆதரவளித்துள்ளதால் ரிஷி வட்டாரத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர்
GETTY IMAGES