மீண்டும் குறிவைக்கப்படும் பிரித்தானிய பிரதமர் ரிஷியின் மனைவி: இம்முறை எதற்காக தெரியுமா?
பிரித்தானிய பிரதமராக ரிஷி பொறுப்பேற்றதிலிருந்தே, ஊடகங்களில் அவரது மனைவியான அக்ஷதா மூர்த்தி குறித்த சர்ச்சைக்குரிய பல செய்திகள் வெளிவரத் துவங்கின.
குடும்பப் பின்னணி
அக்ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனரான நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தியின் மகளாவார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அதிகபட்சம் பங்குகள் வைத்திருக்கும் அக்ஷதாவின் சொத்து மதிப்பு, 730 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.
ஆக, பிரித்தானியாவின் பணக்காரப் பெண்களில் ஒருவரான அக்ஷதாவின் சொத்து மதிப்பு, பிரித்தானிய மகாராணியாரின் சொத்து மதிப்பைவிட அதிகம் என செய்திகள் வெளியாகின.
பின்னர், அக்ஷதா பிரித்தானியாவில் வாழ்ந்தும், சில சலுகைகளைப் பயன்படுத்தி, வெளிநாடுகளிலிருந்து வரும் வருவாய்க்கு பிரித்தானியாவில் வரி செலுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
Image: Twitter
மீண்டும் குறிவைக்கப்படும் அக்ஷதா
இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் துவங்கியுள்ளன.
அக்ஷதாவுக்கு பிரித்தானியாவில் 'non-dom' status அதாவது விரிவாகக் கூறினால் non-domiciled status என்ற நிலை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 'non-dom' status என்பது, ஒருவர் பிரித்தானியாவில் வாழ்ந்தாலும், அவரது சொந்த நாடு வேறொன்று என்றால், அவருக்கு கொடுக்கப்படும் ஒரு நிலை ஆகும். இந்த நிலை உடையவர்கள், வெளிநாடுகளிலிருந்து தங்களுக்கு வரும் வருவாய்க்கு பிரித்தானியாவில் வரி செலுத்தவேண்டியதில்லை.
ரிஷி சுனக்கின் மனைவியான அக்ஷதா மூர்த்தியோ, லண்டனில் எண். 1, Downing Street என்ற முகவரியில் தன் கணவரான ரிஷி மற்றும் தங்கள் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அப்படியிருக்க அவருக்கு 'non-dom' status கொடுக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை உருவானது.
தற்போது எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் இந்த விடயத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றன.
அக்ஷதா மூர்த்தி போன்றவர்கள் சட்டத்தில் உள்ள 'non-dom' status போன்ற ஓட்டைகளை பயன்படுத்தி லாபம் பார்ப்பதாகக் கூறும் லேபர் கட்சி, தாங்கள் வெற்றி பெற்றால், இந்த 'non-dom' status என்ற விடயத்தையே ஒழிக்கப்போவதாக பிரச்சாரம் செய்துவருகிறது.