ஆட்சிக்கு வந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை: பிரித்தானிய பிரதமரின் செல்வாக்கு குறைந்தது
பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் பிரித்தானிய பிரதமரின் செல்வாக்கு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
பெரும்பான்மை மக்கள் கருத்து
ஜூலை மாதம் 5ஆம் திகதி பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றார் லேபர் கட்சித் தலைவரான கெய்ர் ஸ்டார்மர்.
அவர் பிரதமராக பதவியேற்று இரண்டு மாதம் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் பிரித்தானியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக பொதுமக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஆய்வமைப்பான Ipsos மேற்கொண்ட ஆய்வொன்றில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துணைப்பிரதமரான ஏஞ்சலா ரேய்னர் மற்றும் சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோரின் செல்வாக்கு மக்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியா தவறான திசையில் செல்கிறதா?
ஆய்வில் பங்கேற்ற பிரித்தானியர்களில் 52 சதவிகிதம் பேர் பிரித்தானியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
22 சதவிகிதத்தினர் மட்டுமே பிரித்தானியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். 19 சதவிகிதத்தினர் நடுநிலையாக பதிலளித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |