இந்திய வம்சாவளி பிரித்தானிய பிரதமரின் இந்திய வருகை: என்ன எதிர்பார்க்கலாம்...
உலகின் எந்த மூலையில் இந்திய வம்சாவளியினர் ஒருவர் முக்கியப் பொறுப்பேற்றாலும், தங்களுக்கே அந்த பொறுப்பு கிடைத்ததுபோல கொண்டாடும் குணம் கொண்டவர்கள் இந்தியர்கள்.
இந்தியர்களின் சந்தோஷம் இந்திய வம்சாவளி தலைவர்களுக்கு உள்ளதா?
அது, அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் ஆனாலும் சரி, கனடாவில் அனிதா ஆனந்த் ஆனாலும் சரி, அயர்லாந்தில் பிரதமர் லியோ வரத்கர் ஆனாலும் சரி, பிரித்தானியாவில் பிரதமர் ரிஷி சுனக் ஆனாலும் சரி, இந்திய வம்சாவளியினர் தலைவர்களாக தேர்வு செய்யப்படுவதைக் கண்டு இந்தியர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம்!
ஆனால், தேர்வு செய்யப்பட்ட அந்த இந்திய வம்சாவளித் தலைவர்கள் இந்தியாவுக்காக மகிழ்ச்சி அடைகிறார்களா என்றால், அதை உறுதியாகச் சொல்ல முடியாது. உதாரணமாக, பிரித்தானிய உள்துறைச் செயலர்களான பிரீத்தி பட்டேலையும், சுவெல்லா பிரேவர்மேனையும் கூறலாம்.
பிரீத்தி பட்டேலாவது சட்ட விரோத புலம்பெயர்வோருக்கு எதிராகத்தான் செயல்பட்டார். சுவெல்லா, மொத்தத்தில் புலம்பெயர்வோருக்கு எதிராக மட்டுமல்ல, இந்திய மாணவர்கள் பிரித்தானியாவுக்கு வருவதையே எதிர்த்து நிற்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் இந்தியா வந்திருக்கிறார், பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக்.
என்ன எதிர்பார்க்கலாம்?
ஆக, இந்தியா வரும் இந்திய வம்சாவளி பிரித்தானிய பிரதமரான ரிஷியிடமிருந்து இந்தியா என்ன எதிர்பார்க்கலாம்?
ரிஷி பிரித்தானிய பிரதமரானது இந்தியர்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், அவர் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவாரா?
இது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. புதுடெல்லியை மையமாகக் கொண்ட அரசியல் நிபுணரான Sanjaya Baru என்பவர், ரிஷியின் நிகழ்ச்சி நிரலில் இந்தியா முதலிடத்தில் இருக்காது என்கிறார். அதாவது, இந்தியாவுக்கு அவர் முன்னுரிமை கொடுக்கமாட்டார் என்கிறார் Sanjaya.
ரிஷிக்கு பிரித்தானியாவில் எதிர்கொள்ள பொருளாதார சவால்கள் உள்ளன. அத்துடன், அவர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை மீட்டெடுக்கவும் வேண்டுயுள்ளது. ஆகவே, அவர் இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுக்கமாட்டார் என்று கூறும் Sanjaya, ஆகவே, இந்தியா பொறுமை காக்கவேண்டியுள்ளது என்கிறார்.
25 நாடுகளில் 200க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் அரசியலில் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 10 நாடுகள் இந்திய வம்சாவளியினரால் ஆளப்படுகின்றன.
அவர்களில் பலர் இந்தியாவுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் நட்பாக இருக்கிறார்கள். ஆனால், சிலர் இந்திய தூதரக அதிகாரிகளை கடுமையாக வேலை செய்யவைத்துள்ளார்கள் என்கிறார் Sanjaya.
ரிஷியைப் பொருத்தவரை, இந்தியாவுடன் ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள அவர் விரும்புவார். ஆனால், அதற்காக பிரித்தானியாவின் புலம்பெயர்தல் கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டார் அவர் என்கிறார் Sanjaya.
மொத்தத்தில், ரிஷி பிரித்தானியாவுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார், ஆகவே, இந்தியாவைப் பொருத்தவரை, ரிஷியின் வருகை முழுமையாக மகிழ்ச்சியில் முடியுமா என்பது சந்தேகமே என்கிறார் Sanjaya.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |