புதிய புகைப்பட புத்தகத்தை வெளியிட்ட பிரித்தானிய இளவரசி!
இளவரசி கேட் வில்லியம் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் கோவிட் -19 ஊரடங்கு காலத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய ராணியின் பேரனும், சிம்மாசனத்தின் இரண்டாவது இளவரசருமான வில்லியமை மணந்த கேட் மிடில்டன், கடந்த ஆண்டு தேசிய உருவப்படத்துடன் இந்த திட்டத்தை தொடங்கினார்.
பிரித்தானியாவின் முதல் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமர்ப்பிக்க மக்களை கேட்டுக்கொண்டார்.
அதன்படி கிடைக்கப்பெற்ற 31,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்களிலிருந்து 100 படங்களை கேட் உள்ளிட்ட ஒரு தீர்மானிக்கும் குழு தேர்ந்தெடுத்தது.
அவை புத்தகமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு டிஜிட்டல் மற்றும் சமூக கண்காட்சிகளில் காட்டப்பட்டன. Hold Still: A Portrait of Our Nation in 2020 என இந்த புத்தகத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
"இதன் மூலம், நாம் அனைவரும் அனுபவிக்கும் விடயங்களின் பதிவை உருவாக்க - தனிநபர்களின் கதைகளைப் பிடிக்கவும், தொற்றுநோயால் நாங்கள் வாழ்ந்தபோது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கான குறிப்பிடத்தக்க தருணங்களை ஆவணப்படுத்தவும் இந்த புகைப்படக் கலையின் சக்தியைப் பயன்படுத்த நான் விரும்பினேன்" என புத்தகத்தின் அறிமுகத்தில் கேட் எழுதியுள்ளார்.
இந்த புத்தகம், மே 7-ஆம் திகதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். அதில் கிடைக்கும் வருமானம் National Portrait Gallery மற்றும் British mental health charity Mind தொண்டு அமைப்புக்கு பிரித்துக்கொடுக்கப்படள்ளது.
