சொந்த மகனை கடத்தியதாக பொலிசாரால் தேடப்பட்ட ஒருவருக்கு கைக்குட்டையில் முத்தமிட்டு கொடுத்த பிரித்தானிய மகாராணியார்: ஒரு சுவாரஸ்ய செய்தி
சொந்த மகனை கடத்தியதாக சர்வதேச பொலிசாரால் தேடப்பட்ட ஒருவருக்கு, பிரித்தானிய மகாராணியார் கைக்குட்டையில் முத்தமிட்டு கொடுத்ததைக் குறித்த ஒரு சுவாரஸ்ய செய்தி வெளியாகியுள்ளது.
1986ஆம் ஆண்டு, பிரித்தானிய மகாராணியாரை ஓவியர் ஒருவர் ஓவியமாக வரைந்துள்ளார்.
ஆனால், Curtis Hooper என்னும் அந்த ஓவியர் அப்போது சர்வதேச பொலிசாரால் தேடப்பட்டு வந்தாராம்.
தனது சொந்த மகனையே கடத்தியதாக பொலிசார் அவரை தேடி வந்துள்ளனர்.
அந்த காலகட்டத்தில் புகழ்பெற்று விளங்கிய ஓவியரான Hooper, முன்னாள் பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சவுதி அரசர் ஃபைசல் ஆகியோரையும் ஓவியமாக வரைந்துகொடுத்துள்ளார்.
அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அவருக்கு பிரித்தானிய மகாராணியாரை ஓவியம் வரையும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அப்படியே அச்சு அசலாக மகாராணியாரை வரையவேண்டும் என்பதற்காக, சுற்றி சுற்றி வந்து மகாராணியாரை புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம் Hooper.
அந்த புகைப்படங்கள்தான் தற்போது வெளியாகியுள்ளன. Hooper தன் வேலைக்காக அவ்வளவு மெனக்கெடுவதைக் கண்ட மகாராணியாரும், தன் லிப்ஸ்டிக் நிறம் சரியாக வரவேண்டும் என்பதற்காக தனது கைக்குட்டையில் முத்தம் ஒன்றை பதித்து Hooperஇடம் கொடுத்தாராம்.
அத்துடன் படம் வரைந்து முடித்ததும், அரண்மனையிலேயே ராஜ குடும்பத்துடன் விருந்தும் கொடுக்கப்பட்டதாம் Hooperக்கு.


