10 ஆண்டுகளாக ஒன்லைன் மூலம் உருகி உருகி காதலித்த நபர் யார் என தெரியவந்ததால் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள பெண்: ஒரு எச்சரிக்கை செய்தி
லண்டனில் வாழும் பெண் ஒருவர், 10 ஆண்டுகளாக ஒருவரை ஒன்லைன் வாயிலாக உருகி உருகி காதலித்து வந்த நிலையில், தான் காதலித்தது ஒரு ஆளை அல்ல தெரியவந்ததால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
பிரித்தானிய வானொலி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் கீரத் அஸ்ஸி (Kirat Assi).
தன் தூரத்து உறவினரான சிம்ரன் போகல் (Simran Bhogal) என்ற பெண் மூலம் பேஸ்புக்கில் அறிமுகமான பாபி என்பவருடன் பழகத் தொடங்கியுள்ளார் கீரத்.
கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி நிர்வாணப் படங்கள் அனுப்புவது வரை அவர்களது உறவு வளர்ந்துள்ளது. இப்படியே பல ஆண்டுகள் தொடர்ந்த நிலையில், நேரடியாக பாபியை சந்திக்கச் சென்றிருக்கிறார் கீரத். சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று அவரது வீட்டுக்குச் சென்றால், அங்கு நின்றிருந்த சிம்ரனின் உறவினரான பாபி, கீரத்தை யாரோ தெரியாத நபர் போல பாவித்து பேசியிருக்கிறார்.
அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண்ணும் சிறுவனும் வர, அவர்கள் பாபியின் மனைவியும் மகனும் என்பதை கீரத் அறிந்து, பாபி தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணியிருக்கிறார்.
சரி, நீங்கள் என் சகோதரன் என்று எண்ணி என்னிடம் பேசுகிறீர்கள் போல என்று பாபி கூற, கீரத், பாபி அனுப்பிய அவரது புகைப்படங்களைக் காட்டியிருக்கிறார். இதனால் அவரது வீட்டில் பிரச்சினை உருவாகியிருக்கிறது.
கடைசியில், கோபமடைந்த பாபி பொலிசாரை அழைக்கப்போவதாகக் கூற, குழம்பிப்போன கீரத் வீடு திரும்பியிருக்கிறார்.
அதற்குப் பிறகுதான், தான் இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட விடயம் அவருக்குத் தெரியவந்துள்ளது. கீரத் வீட்டுக்கு தன் உறவினர்களுடன் வந்த சிம்ரன் ஒரு விடயத்தைக் கூற, மயங்கி விழுந்திருக்கிறார் கீரத்.
அந்த பயங்கர உண்மை என்னவென்றால், உண்மையாகவே பாபி என்று ஒருவர் இருக்கிறார், ஆனால், அவருக்கு கீரத்தைத் தெரியாது. இந்த சிம்ரன் என்ற பெண், பாபியின் பெயரைப் பயன்படுத்தி போலியாக பாபி பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்றைத் துவக்கி, இத்தனை ஆண்டுகளாக கீரத்தை ஏமாற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.
தான் இத்தனை ஆண்டுகளாக உருகி உருகி காதலிதத்து ஒரு ஆணை அல்ல, சொல்லப்போனால் இல்லாத ஒருவரை இருப்பதாக நம்பி தான் காதலித்ததும், பாலியல் விடயங்கள், நிர்வாணப்படங்கள் முதலான அனைத்தையும் பகிர்ந்துகொண்டதும் தெரியவர, கீரத்துக்கு பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டிருக்கிறது.
கீரத் பொலிசாரிடம் செல்ல, (அவர் என்ன புகார் கூறமுடியும்) பொலிசார் அதை கண்டுகொள்ளவே இல்லை.
பிறகு, கீரத் சிம்ரன் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அவரது வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியே செட்டில் பண்ணப்பட்டிருக்கிறது.
சிம்ரன் மன்னிப்புக் கோரியிருக்கிறார். ஆனால், என்ன செட்டில்மெண்ட் என்பது வெளியிடப்படவில்லை.
எனக்கு நடந்தது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனல், இதை யாரும் சீரியசாக எடுக்கமாட்டேன்கிறார்கள். என் பத்து ஆண்டு வாழ்க்கை வீணாகப் போய்விட்டது என்கிறார் கீரத்.
தன்னைப்போல மற்றவர்கள் ஏமாறக்கூடாது என்ற நோக்கில் தன் கதையை வெளியுலகுக்குத் தெரிவித்திருக்கிறார் கீரத்.