8 வயதில் ஐரோப்பிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வரலாறு படைத்த லண்டன் சிறுமி போதனா சிவானந்தன்
லண்டன் பாடசாலை மாணவி ஒருவர் தனது எட்டு வயதிலேயே கான்டினென்டல் போட்டியில் வெற்றி பெற்று ஐரோப்பாவின் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக தெரிவாகி வரலாறு படைத்துள்ளார்.
சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக
வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோ பகுதியை சேர்ந்த போதனா சிவானந்தன், குரோஷியா நாட்டில் நடந்த ஐரோப்பிய ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக தெரிவாகியுள்ளார்.
Credit: No 10 Crown
கொரோனா பெருந்தொற்று நாட்களில் தான் போதனா செஸ் விளையாடத் தொடங்கியுள்ளார். ஆனால் 8 வயதில் ஐரோப்பாவின் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக மாறியுள்ளார்.
இந்த நிலையில், கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்றும், பிரித்தானியாவின் இளம் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவராக மாற வேண்டும் என்றும், இறுதியில் உலகப் பட்டத்தை வெல்லவும் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி தமது முதல் சர்வதேச மாஸ்டரான 39 வயது Lorin D'Costa என்பவரை வென்றுள்ள போதனா, அதற்கு முன்னர் இரு முறை ருமேனிய சாம்பியன் பட்டம் வென்ற 54 வயது Vladislav Nevednichy என்பவரை சம நிலையில் திணறடித்தார்.
செஸ் உலகம் இதுவரை கண்டிராத
ருமேனிய சர்வதேச மாஸ்டரும் பெண் கிராண்ட்மாஸ்டருமான 30 வயது Irina Bulmaga தெரிவிக்கையில், வெறும் 8 வயது சிறுமி, செஸ் விளையாட்டில் இதுவரை சாதனை படைத்துள்ள அனைவரையும் முந்தியுள்ளது உண்மையில் மறக்க முடியாத வரலாற்றுத் தருணம் என்றார்.
Credit: No 10 Crown
செஸ் உலக பிரபலம் ஒருவர் தெரிவிக்கையில், போதனா இங்கிலாந்தின் மிகச்சிறந்த வீரராகவும், செஸ் உலகம் இதுவரை கண்டிராத சிறந்த வீரர்களில் ஒருவராகவும் வலம் வருவார் என பாராட்டியுள்ளார்.
இதனிடையே, இந்த கோடையில் போதனா பிரித்தானிய பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு அழைக்கப்பட்டார், மேலும் பிரதமர் ரிஷி சுனக்குடன் செஸ் விளையாடுவதும் புகைப்படங்களாக வெளியானது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |