ஹிட்லரின் முடிவுதான் இவருக்கும்... பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் காட்டம்
புடினுடைய படைகள் நாஸிக்களைப் போலவே நடந்துகொள்கின்றன என்று விமர்சிக்கும் பிரித்தானிய பாதுகாப்புச் செயலர், ஹிட்லரின் முடிவுதான் புடினுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் அமையும் என்று கூற இருக்கிறார்.
சோவியத் யூனியன் நாஸி ஜேர்மனியை வென்றதை நினைவுகூரும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் இன்று ரஷ்யாவில் நடைபெற உள்ள நிலையில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான Ben Wallace இன்று லண்டன் தேசிய இராணுவ அருங்காட்சியகத்தில் உரையாற்ற இருக்கிறார்.
அவர் தனது உரையில், உக்ரைனை ஊடுருவியதன் மூலம், புடினும் அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவரது தளபதிகள் ஆகியோர், நாஸிக்களை பிரதிபலித்துள்ளார்கள் என்றும், 70 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் செய்த அதே தவறுகளை இவர்கள் மீண்டும் செய்கிறார்கள் என்றும் தெரிவிக்க இருக்கிறார்.
அத்துடன், அவர்களுக்கு ஏற்பட்ட முடிவுதான் நிச்சயம் இவர்களுக்கும் என்றும் கூற உள்ளார் Ben Wallace.