9 ஆண்டுகளாக இந்திய சிறையில் போராடும் பிரித்தானியர்: ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம்
British Sikh Jagtar Singh Johal Gets Bail: இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கிய இந்திய நீதிமன்றம்
பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2017 ம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்தை சேர்ந்த பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹல் இந்திய அதிகாரிகளால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
தற்போது 39 வயதாகும் ஜக்தார் சிங் ஜோஹல் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய திருமணத்திற்காக இந்தியா வந்து சேர்ந்தார்.
திருமணம் முடிந்து 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஷாப்பிங் மாலில் தன்னுடைய மனைவுடன் இருக்கும் போது ஜக்தார் சிங் ஜோஹல் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் காரில் பலவந்தமாக கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்.

ஜக்தார் சிங் ஜோஹல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு
ஜக்தார் சிங் ஜோஹல் பஞ்சாபில் உள்ள காலிஸ்தான் விடுதலை படைகளுக்கு நிதியுதவி செய்து வந்ததாக இந்திய அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இருப்பினும் இது தொடர்பான போதிய ஆதாரங்களை இந்திய அரசு அதிகாரிகள் சமர்ப்பிக்க தவறியதால், ஜக்தார் சிங் ஜோஹல் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் பல ஆண்டுகளாக இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.