இஸ்ரேலில் இரண்டு அழகிய பிரித்தானிய சகோதரிகள் மாயம்: உறவினர்கள் கூறும் துயரச் செய்தி
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் ஆறு பிரித்தானிய குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.
காணாமல் போனவர்களில் இரண்டு அழகிய சகோதரிகள்
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் Lianne. அவர் 7ஆம் திகதி நடந்த தாக்குதலிலேயே கொல்லப்பட்டுவிட்டார். அவரது கணவரான Eliயைக் காணவில்லை.
அவரையும் சேர்த்து, காணாமல் போன பிரித்தானியர்கள் மொத்தம் 10 பேர். அவர்களில் Eli, Lianne தம்பதியரின் மகள்களான Noiya (16) மற்றும் Yahel (13) ஆகியோரும் அடங்குவர்.
ஒரு அன்பான தாயாக, தோழியாக, மகளாக, சகோதரியாக விளங்கிய Lianneஐயும், குடும்பத்துக்கே எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் Noiyaவையும் Yahelஐயும் இழந்து தாங்கள் தவித்து வருவதாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |