பிரான்சில் கைப்பற்றப்பட்ட பிரித்தானிய படகின் கேப்டன் மீது குற்றவியல் நடவடிக்கை: பெருந்தொகை பிழை விதிப்பு
பிரான்சில் கைப்பற்றப்பட்ட பிரித்தானிய படகின் கேப்டன் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள இருப்பதுடன் 63,000 பவுண்டுகள் அளவுக்கு பிழையும் செலுத்த நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள குறித்த தகவலில், Cornelis Gert Jan என்ற படகின் கேப்டன் எதிர்வரும் ஆகஸ்ட் 11ம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி பிரான்ஸ் கடற்பகுதியில் மீன் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் இருந்து 2,160 கிலோ அளவுக்கு scallops மீன் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த நபர் மீது நிர்வாக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனபதுடன் 63,000 பவுண்டுகள் பிழையாக செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.