ஆபத்தில் சிக்க வைத்தார்... உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்ட பிரித்தானிய ராணுவ வீரருக்கு ஏற்பட்ட நிலை
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் போரிட்ட பிரித்தானிய ராணுவ வீரர் நாடு திரும்பிய நிலையில், தற்போது சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் ஆதரவு படைகளுடன்
குறித்த ராணுவ வீரரின் செயல், பிரித்தானியாவை ரஷ்யாவுடன் போருக்கு தள்ளும் நிலையை ஏற்படுத்தியது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 21 வயதான Alexander Garms-Rizzi என்ற அந்த வீரர் நேட்டோ நடவடிக்கைக்கு என எஸ்தோனியாவுக்கு அனுப்பி இருந்த நிலையில், திடீரென்று மாயமாகியிருந்தார்.
Credit: Solent News
இந்த நிலையில், தாம் எல்லையை கடந்து உக்ரைன் ஆதரவு படைகளுடன் இணைந்துள்ளதாக தமது பிரிவுக்கு தகவல் அனுப்பியுள்ளார். 2022 மார்ச் மாதம் விடுமுறைக்கு சென்றவர், இரண்டு வாரங்கள் கடந்தும் முகாமிற்கு திரும்பவில்லை.
12 வயது வரையில் ரஷ்யாவில் வளர்ந்தவர், உக்ரைனில் அதிக நண்பர்களை கொண்ட அந்த பிரித்தானிய ராணுவ வீரர், தாம் உக்ரைனில் போரில் கலந்துகொள்ளும் பொருட்டே எல்லை தாண்டியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
உக்ரைனின் தற்போதைய நிலை குறித்து தமது சக வீரர்களிடம் கவலை தெரிவித்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவரது தாயார் ரஷ்யர் எனவும், இத்தாலி மற்றும் ரஷ்ய மொழியில் சரளமாக பேசக்கூடியவர்.
ராணுவத்தில் இருந்தும் நீக்கம்
இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி அவர் டோவர் துறைமுகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு ராணுவ உடை மற்றும் உக்ரைன் அடையாளங்களுடன் காணப்பட்ட நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
@getty
உக்ரைன் மக்களுக்கு உதவும் பொருட்டு, சென்றதாகவும், ஆனால் ரஷ்ய படைகளின் கொடூரங்களை நேரில் பார்த்த பின்னர், தம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 6 மாதங்களுக்கு பின்னர் பிரித்தானியா திரும்பிய பின்னர் கைது செய்யப்பட்டு, ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், ராணுவத்தில் இருந்தும் அவர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |