உக்ரைனில் சாலை விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய வீரர்: இறுதியில் உறுதி செய்யப்பட்ட அடையாளம்
British Soldier Who Died in Accident in Ukraine Named: உக்ரைனில் சாலை விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இராணுவ வீரரின் பெயர் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய வீரர்
கடந்த வாரம் உக்ரைனில் பிரித்தானிய ராணுவ வீரர் ஒருவர் மோசமான சாலை விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
தற்போது, உயிரிழந்த பிரித்தானிய வீரர் மேஜர் பால் வில்க்ஸ்(Major Paul Wilks) என அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
40 வயதுடைய மேஜர் பால் வில்க்ஸ் சனிக்கிழமை அன்று போர் முனையில் இருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்து இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாண்ட் ஹர்ஸ்ட் ராயல் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற மேஜர் பால் வில்க்ஸ், உளவு பிரிவில் தனது பணியை கடந்த 2012ம் ஆண்டு தொடங்கினார்.
ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளில் பால் வில்க்ஸ் தனது பணியை சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.
மேஜர் பால் வில்க்ஸ் சேவையை பாராட்டி இரண்டு பதக்கங்களையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.